அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


எனது கணக்கிலிருந்து நான் எப்படி பணம் எடுப்பது?

பணம் திரும்பஎடுப்பதற்கு, பக்கத்தின் உச்சியிலுள்ள ‘வித்ட்ராயல்’ தட்டியை (வலதுபக்கமாய் 4வது தட்டி) கிளிக் செய்து, பிறகு ‘வித்ட்ராயல் வேண்டுகோள்’ என்பதை கிளிக் செய்யவும். தேவையான தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள் அனைத்தையும் வழங்கி, விவரங்களை முழுமையாக பூர்த்திசெய்யவும். உறுதிப்படுத்தல் மீது கிளிக் செய்து பிறகு படிவத்தை பிரிண்ட் எடுக்கவும். அதில் பேனாவால் கையொப்பமிட்டு, அதை withdrawals@xforex.com‘க்கு அனுப்பிவைக்கவும், அதன்மூலம் எங்களால் உங்களது வேண்டுகோளை செயல்படுத்த இயலும்.

பணமானது உங்களது டெபிட் கார்டிற்கு அனுப்பிவைக்கப்படவேண்டிய நிலையிலும் கூட, முழு படிவமும் எதுவும் விடுபடாமல் பூர்த்திசெய்யப்படவேண்டியிருப்பதால், இன்னமும் வங்கி விவரங்களை பூர்த்திசெய்யவேண்டியதை தயவுசெய்து கவனிக்கவும். படிவத்தை எண்களாலும் எழுத்துகளாலும் மட்டுமே பூர்த்திசெய்யவும். குறியீடுகளையோ கரன்சி சின்னங்களையோ உபயோகிக்கவேண்டாம். குறியீடுகள் ஏதுமில்லாமல் ‘முழு எண்களின்’ எண்களை மட்டுமே உபயோகிக்கவும்.

ஸ்விஃப்ட்/IBAN குறியீட்டு முறையை உங்களது வங்கி உபயோப்பதில்லை எனும் பட்சத்தில், இப்பகுதியை கிளையின் எண்ணை மீண்டும் நிரப்பி பூர்த்திசெய்யலாம் (உங்களது வங்கி ஸ்விஃப்ட் குறியீடு எதையும் கொண்டிருக்காதபட்சத்தில் மட்டுமே, ஆனால் பெரும்பாலான வங்கிகள் கொண்டிருக்கின்றன). இவ்விவரங்களுக்காக உங்களது வங்கியுடன் பேசுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

உங்களது ஆவணங்கள் யாவும் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே பணம்திரும்ப எடுக்கமுடியும் என்பதை தயவுசெய்து கவனிக்கவும். இதற்குமுன் நீங்கள் எங்களுக்கு அனுப்பியிருக்காமல் இன்னும் ஆவணங்கள் ஏதும் நிலுவையில் இருந்தால், வித்ட்ராயல்களை கொடுக்க இயலாது.

வித்ட்ராயல் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், வித்ட்ராயல் எஃப்ஏக்யூ பக்கத்தைப் பார்ப்பதற்கும், இங்கே கிளிக் செய்யவும்

வேறுஏதேனும் வழியில் பணத்தை திரும்பஎடுக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து: cs@xforex.com‘க்கு ஈமெயில் அனுப்பவும். தயவுசெய்து உங்களது பெயர், கணக்கு எண், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பவற்றை வழங்கவும், உங்களது வேண்டுகோள் தொடர்பாக விவாதிப்பதற்கு, விரைவிலேயே எங்களது பிரதிநிதி உங்களைத் தொடர்புகொள்வார்.

உச்சிக்குச் செல்க
பட்டியலிடப்படாத கேள்வி ஏதும் நான் கேட்கவேண்டியிருந்தால், என்ன செய்வது?

தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ள தயங்கவேண்டாம், உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.

உச்சிக்குச் செல்க
பிற ஃபாரெக்ஸ் புரோக்கர்களுடன் ஒப்பிடும்போது, XForex’ன் ஆதாயங்கள் யாவை?

கமிஷன்கள் இல்லை

XForex, புதிய பொசிஷன்களை திறப்பதற்கு, கட்டணங்கள் எதையும் விதிப்பதில்லை. XForex’ன் வருவாயானது முற்றிலும், விலை குறிப்பிடல் மற்றும் கேட்டல் விலைக்கு இடையிலான வித்தியாசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறது, எனவே உங்களது வர்த்தக வெற்றியை உறுதிப்படுத்துவது எங்களது நலனுக்கானது - ஆதலால், உங்களது முதலீடுகளில் இருந்து வர்த்தகர் எனும் முறையில் இலாபம் ஈட்டுவதற்கு அவசியமான சாதனங்கள் அனைத்தையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்

வர்த்தகத்திற்கும் சேவைகளுக்குமாக தினமும் 24 மணிநேரமும்

அலுவலகங்கள் யாவும், அனைத்து கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும், ஆதரவு வழங்குவதற்குமாக, ஞாயிறு இரவிலிருந்து வெள்ளி இரவு வரை வாரத்திற்கு 5.5 நாட்கள் என தினமும் 24 மணிநேரமும் திறந்திருக்கின்றன.

நட்பான இடைமுகம்

பயனர்-நட்பான வர்த்தகத் தளத்தை, எங்களது முன்னணி மென்பொருள் பொறியளாளர்கள் வடிவமைத்துள்ளனர். உங்களது பிரவுசரை (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் போன்றவை) திறந்து, எங்களது தளத்தை உள்ளிட்டு, புகுபதிகை செய்தால் போதும் - எந்தவொரு மென்பொருளையும் பதிவிறக்கம் செய்யவோ நிறுவவோ வேண்டியதில்லை, இத்தளத்தை உலகின் எப்பகுதியில் இருந்தும் எந்த கம்ப்யூட்டரில் இருந்தும் அணுகலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் இண்டர்நெட் கனெக்‌ஷன் மட்டுமே - வீட்டிலிருந்தோ, வெளியிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ வர்த்தகம் செய்யுங்கள்.

நிகழ்-நேர கணக்குப் புதுப்பிப்புகள்

வர்த்தகர்கள், தங்களது கணக்குகளில் அனைத்தையும் நிகழ்-நேரத்திலியே கண்காணிக்கலாம். கணக்கு இருப்பு, ஒப்பன் பொசிஷன்களின் இருப்பு, கிடைக்கப்பெறுகின்ற மார்ஜின், எக்ஸ்போஷர் ஆகியவை இதில் உள்ளடங்குகிறது. நிகழ்-நேர கண்காணிப்பானது, தங்களது தொகுதியை முறையாக நிர்வகிக்கும் வகையில் அதன் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வர்த்தகர்களுக்கு வழிவகுக்கிறது.

கிரெடிட் கார்டு சார்ஜிங்

XForex தனது வாடிக்கையாளர்களுக்கு, அவர்தம் கிரெடிட் கார்டுகளை பயனுள்ள முறையிலும் பாதுகாப்பாகவும் சார்ஜ் செய்யவும் ரீசார்ஜ் செய்யவும் வழிவகுக்கிறது. பேமெண்டுகள் யாவும் SSL பாதுகாப்புமிக்க சர்வரை உபயோகித்து செய்யப்படுகின்றன. உங்களது பேமெண்ட் விவரங்கள் யாவும் நுண்ணியமாய் மறைகுறியீடாக்கப்படும் முறையில் அனுப்பப்படுவதுடன், அவை இனிமேல் சம்மந்தப்படாது எனும் நிலையில் எங்களது சர்வர்களில் இருந்து அழிக்கப்படுகின்றன. இது உங்களது வர்த்தகத்தை அதிவிரைவாக, பயனுள்ள, மற்றும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள உங்களை அனுமதிக்கிறது.

பாதுகாப்பான வர்த்தகம்

Xforex வர்த்தகத் தளமானது, இணையத்திலேயே மிகவும் உயர்ந்த தரவு பாதுகாப்பு தரநிலைகளை எதிர்கொள்கிறது. எங்களது பாதுகாப்பு நிபுணர்கள் யாவரும், பாதுகாப்பான மெய்நிகர் வர்த்தக அறையை வழங்குவதற்காக மிகவும் ஆழமான நிலைக்கு சென்றுள்ளனர். SSL பாதுகாப்புபெற்ற சர்வரை உபயோகித்து, உங்களது தனிப்பட்ட விவரங்கள் யாவும், நுண்ணியமாய் மறைகுறியீடாக்கப்படும் முறையில் பராமரிக்கப்படுவதுடன், அவை இனிமேல் சம்மந்தப்படாது எனும் நிலையில் எங்களது சர்வர்களில் இருந்து அழிக்கப்படுகின்றன. XForex, அயல்நாட்டு கரன்சி சந்தையை, நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்வதற்கு வர்த்தகளுக்கு வழிவகுத்து, பாதுகாப்பான மற்றும் பத்திரமான வர்த்தக சூழலுக்குள் உருமாற்றுகிறது.

உச்சிக்குச் செல்க
ஆட்டோமெடிக் பிரீமியம் மற்றும் பரிவர்த்தனையின் செல்லுபடிகாலம் என்ன?

ஆட்டோமெடிக் பிரீமியம் மூலம் முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் தாங்கள் அவற்றை மூட விரும்பும் வரை நிலைகளைத் திறந்தே வைத்திருக்கலாம்.
ஒரு வர்த்தகர் புதிய நிலையைத் திறக்கும் போது, இயல்பான காலாவதி தேதி அமைக்கப்படும்.
மதிப்பு தேதி முடிவடையும் போது (சர்வர் நேரம்), திறந்திருக்கும் நிலைகள் தானாகவே அடுத்த நிறுத்த மதிப்பு தேதி வரை நீட்டிக்கப்பட்டு, இரண்டு வணிக நாட்களைச் சேர்த்துக் கொள்ளும். பிரீமியமானது நாணய ஜோடிகளையும் சார்ந்ததாக இருக்கும். நிலைக்கான இரண்டு நாணயங்களின் பிரீமியம் வேறுபாட்டைப் பொருத்து, முதலீட்டாளர் புள்ளிகளை ஈட்டுவார் அல்லது செலுத்துவார்.

உச்சிக்குச் செல்க
ஃபாரெக்ஸ் சந்தையில் வர்த்தக நேரங்கள் யாவை?

CFD வர்த்தகம் ஞாயிற்றுக் கிழமை 22:00 GMT (21:00 DST) தொடங்கி வெள்ளிக்கிழமை 22:00 GMT (21:00 DST) வரை நடைபெறுகிறது.

தினசரி முறிப்புகள் கொண்ட நிதிச் சாதனங்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ளவும். Read more....

உச்சிக்குச் செல்க
தொழில்நுட்ப விவகாரங்களின் காரணமாக சிஸ்டம் செயல்படாமல் இருந்தாலும் இணையதளத்தை என்னால் அணுக இயாலத பட்சத்திலும் நான் என்ன செய்வது?

நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு ஒப்பன் வர்த்தகங்களிலும் தொழில்நுட்ப விவகாரங்கள் தலையிட அனுமதிக்கவேண்டாம்.

(செயற்கையாக உங்களுக்காக பொசிஷன்களை ஒப்பன் அல்லது குளோஸ் செய்வதில் உங்களுக்கு உதவுவதற்காக மார்க்கெட் அமர்வுகளின்போது தினமும் 24 மணிநேரமும் எங்களது டீலிங் அறை கிடைக்கப்பெறுவதை தயவுசெய்து கவனிக்கவும்).

எங்களது தொலைபேசி எண்ணை, எங்களது ‘எங்களை தொடர்புகொள்க’ பக்கத்தில் காணலாம். எங்களது ஆன்லைன் ஆபரேட்டர்களும், வர்த்தக அமர்வுகளின்போது தினமும் 24 மணிநேரமும் கிடைக்கப்பெறுகின்றனர்.

உச்சிக்குச் செல்க
வர்த்தக அட்டவணைகளை நான் எப்படி காண்பது?

வர்த்தக அட்டவணைகளைக் காண்பதற்கு, பக்கத்தின் மேற்பகுதியிலுள்ள ‘டூல்ஸ்’ (வலதுபுறமாய் 7வது தட்டி) தட்டியை கிளிக் செய்யவும். பிறகு பட்டியலின் அடிப்பகுதியில் ‘அட்டவணை’ மீது கிளிக் செய்யவும். அட்டவணைகளைக் காண்பதற்கு, உங்களது கம்ப்யூட்டரில் ‘ஜாவா’ (www.java.com) நிறுவப்படவேண்டும். ஜாவா’வின் சமீபத்திய பதிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அட்டவணைகளில் காட்டப்படுகின்ற விலைகள் யாவும் சுட்டிக்காட்டும் நோக்கத்திற்காக மட்டுமே என்பதையும், அவை வர்த்தக விலைகளிலிருந்து மாறுபடக்கூடும் என்பதையும் தயவுசெய்து கவனிக்கவும். உங்களது கரன்சி வகையை மாற்றுவதற்கு, பக்கத்தின் மேற்பகுதியிலுள்ள ‘இன்ஸ்ட்ருமெண்ட்’ (வலதுபுறமாய் 2வது தட்டி) மீது கிளிக் செய்து, உங்களுக்கு வேண்டிய கரன்சி மீது கிளிக் செய்யவும்.

அட்டவணைகளில் காட்டப்படுகின்ற விலைகள் யாவும் சுட்டிக்காட்டும் நோக்கத்திற்காக மட்டுமே என்பதையும், அவை வர்த்தக விலைகளிலிருந்து மாறுபடக்கூடும்.

(இந்த அட்டவணைகளின் உங்களது உபயோகத்தை பிற பிரவுசர்கள் பாதிக்கக்கூடும் என்பதால், இண்டர்நெட் எக்ஸ்புளோரரை உபயோகிக்குமாறு நாங்கள் பரிந்துரைப்பதை தயவுசெய்து கவனிக்கவும்).

உச்சிக்குச் செல்க
நான் மீண்டும் புகுபதிகை செய்ய முயற்சித்தேன், ஆனால் அமர்வு உபயோகித்தில் உள்ளது என அது சொல்கிறது?

இதன் அர்த்தம் என்னவெனில், முன்பு நீங்கள் சரியானமுறையில் வெளியேறியிருக்கவில்லை என்பதே. எனவே, தயவுசெய்து சில நொடிகள் காத்திருந்து, பின்னொரு சமயம் புகுபதிகை செய்ய முயற்சியுங்கள்.

உச்சிக்குச் செல்க
நான் எனது பயனர்பெயரையும் பாஸ்வேர்டையும் உள்ளிட்டேன், ஆனால் புகுபதிகையாக தவறியது. நான் என்ன செய்வது?

நிகழ்கின்ற பொதுவான பிரச்சனை என்னவெனில், நீங்கள் தவறான பயனர்பெயரை மற்றும்/அல்லது பாஸ்வேர்டை உள்ளிட்டிருக்கக்கூடும். பாஸ்வேர்டானது, இலக்கங்கள் மற்றும் லத்தீன் எழுத்துகளின் கலவையாக இருக்கலாம். பயனர்பெயரை அல்லது பாஸ்வேர்டை தவறாக டைப் செய்வதானது பின்வரும் பிழைச்செய்தியைக் காட்டும்: *நீங்கள் உள்ளிட்ட பயனர்பெயர் அல்லது பாஸ்வேர்ட் தவறானது.

உச்சிக்குச் செல்க
நான் எனது பாஸ்வேர்டை தொலைத்துவிட்டேன்/மறந்துவிட்டேன், என்ன செய்வது?

உங்களது பாஸ்வேர்டை மீளமைப்பதற்கு, புகுபதிகையின் முகப்புப் பக்கத்தில் ‘பாஸ்வேர்ட் மறந்தது’ என்பதன் மீது கிளிக் செய்யவும் (உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது புதிய பாஸ்வேர்டானது உங்களது ஈமெயில் முகவரிக்கு தானாக அனுப்பிவைக்கப்படும் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்).

அல்லது நீங்கள் எங்களை போனிலோ நேரடி அளவளாவல் சேவையிலோ தொடர்புகொள்ளலாம், நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

உச்சிக்குச் செல்க
செயலற்ற கணக்குக் கட்டணம் என்றால் என்ன?

செயலற்றிருக்கும் XForex கணக்குக்கு &5 க்கு செயலற்ற கணக்கு மதிப்பிடப்படும். 3 மாத காலத்துக்கு எந்த வர்த்தகச் செயல்பாடும் நிகழாவிட்டால் கணக்குச் செயலற்றதாகக் கருதப்படும். சேவை பயன்படுத்தப்படாவிட்டால், சேவையை வழங்குகையில் ஏற்பட்ட செலவுகளால் இந்தக் கட்டணம் மதிப்பிடப்படுகிறது. கணக்கு மீண்டும் இயக்கப்படும் வரை அல்லது கோரப்படாத சொத்தாக தகுந்த நிலைக்கு அனுப்பப்படும் வரை செயலற்ற கணக்கின் தொகை மதிப்பிடப்படும். ஒரு செயலற்ற கணக்கைத் தவிர்க்க ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் குறைந்தது ஒரு பரிவர்த்தனையை நிறைவு செய்யவும்.

உச்சிக்குச் செல்க
தளத்தை பாதுகாப்பதற்கு என்ன பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உபயோகிக்கப்படுகின்றன?

தரவு பாதுகாப்பு அமைப்பானது, பல்வேறு வித்தியாசமான பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டுள்ளது:

 • SSL மற்றும் டேட்டா என்க்ரிப்ஷன்.
 • ஃபயர்வால் மர்றும் ஜெனரல் சர்வர் புரொடக்‌ஷன்.
 • யூசர் ஐடெண்டிஃபிகேஷன் (அனுமதியளித்தல் மற்றும் அங்கீகரித்தல்).
 • க்ளையண்ட் கோட் புரொடக்‌ஷன் (CASPOL).
  (உ-ம்., பேமெண்டுகள், பாஸ்வேர்டுகள், இன்னபிற).
உச்சிக்குச் செல்க
நான் டெபாசிட் செய்ய முயற்சித்தேன், ஆனால் பிழை தொடர்பான செய்தியும் எண் குறியீட்டையும் நான் பெற்றேன், அதன் அர்த்தம் என்ன?

சாதாரண எண் பிழையும் கூட உங்களது டெபாசிட்டை பாதிக்கும் என்பதால், எங்களது அமைப்பிற்குள் உங்களது கார்டு தொடர்பான விவரங்களை உள்ளிடும்போது தயவுசெய்து மிகவும் கவனமாகச் செய்யவும். பெரும்பாலான நேரங்களில், உங்களது டெபிட் மற்றும் பேங்க் கார்டுகளின் வரம்புகளை நிர்ணயிக்கின்ற வகையில் டெபாசிட் பிரச்சனைகள் வங்கிகளின் மூலமானதாக இருக்கின்றன, எனவே உங்களது கார்டில் வரம்புகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தயவுசெய்து உங்களது வங்கியுடன் பேசவும்.

நீங்கள் உங்களது கார்டு தொடர்பான விவரங்களை எங்களது அமைப்பில் தவறாக உள்ளிட்டிருக்கும் பட்சத்தில், உடனடியாக கார்டு தொடர்பான விவரங்களை எங்களது அமைப்பில் புதுப்பிப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள் (’செட்டிங்ஸ்’> ’பேமெண்ட் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்’).

உச்சிக்குச் செல்க
கணக்கு ஒன்றை துவங்குவதற்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச தொகை எவ்வளவு?

எங்களது இணைய அடிப்படையிலான தளத்திற்கு $100 என குறைவான தொகையுடன் நீங்கள் கணக்கைத் துவங்கலாம். வர்த்தகர்களுக்கு, 1:400 எனும் அளவுவரை லெவரேஜ் கிடைக்கப்பெறுகிறது.

உச்சிக்குச் செல்க
பிப் என்றால் என்ன?

பிப் என்பது ஃபாரெக்ஸ் விலைகுறிப்பிடலில், மிகச்சிறிய எண்சார்ந்த இடம். இச்சொல்லானது, “பாயிண்ட்ஸ்” எனும் சொல்லாலும் மாற்றாக உபயோகிக்கப்படுகிறது.

EUR/USD 1.3300 என்பது 1.3301 ‘க்கு மாறுவது = 1 பிப் மாற்றம்

உச்சிக்குச் செல்க
புகார் ஒன்றை நான் எப்படி பதிவுசெய்வது?

ஏதேனும் காரணத்திற்காக, எங்களது சேவை குறித்து நீங்கள் திருப்தியடையவில்லை எனும்பட்சத்தில், அதுகுறித்து புகார் நீங்கள் எதையும் பதிவுசெய்ய விரும்பினால், தயவுசெய்து புகார் படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்காகஆதரவுப் பக்கம் சென்று, அதை பூர்த்திசெய்து compliance@xforex.com‘க்கு ஈமெயில் செய்யுங்கள். புகார்விசாரிப்புத் துறையின் அதிகாரி, உங்களது கோரிக்கையைப் பெற்று, 3 பணிநாட்களுக்குள் உங்களுக்கு பதில் அனுப்புவார்.

குறித்த தருணத்திற்கு முன்னதாக, உங்களது புகாரானது வாடிக்கையாளர் சேவைத் துறையால் தீர்க்கப்பட இயலாது என்பதை தயவுசெய்து கவனிக்கவும் (நீங்கள் வாடிக்கையாளர் சேவைத் துறையை நேரடி அளவளாவல் அல்லது ஈமெயில் வாயிலாக தொடர்புகொள்ளலாம்.

உச்சிக்குச் செல்க
எனது கணக்கில் நான் எவ்வாறு பணம் நுழைப்பது?

உங்களது கணக்கில் பணம் நுழைப்பதற்கு, இரு முறைகள் உள்ளன:

 1. ஒயர் டிரான்ஸ்ஃபர்
 2. கிரெடிட் கார்டு

இரண்டையுமே எங்களது ஆன்லைன் தளத்திலிருந்து செய்யலாம்.

கிரெடிட் கார்டு நிறுவனத்தில் இருந்து உறுதிப்படுத்தலை நாங்கள் பெற்றவுடனே அனைத்து ஒயர் டிரான்ஸ்ஃபர்களையும் செயல்படுத்துகிறோம். கிரெடிட் கார்டு மூலம் நிதிவழங்குவது, ஏறத்தாழ உடனடியானது; ஆனாலும் தாமதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கும் நோக்கில் கூடுமான விரையில் கிரெடிட் கார்டின் நகலை அனுப்பிவைக்கவேண்டிய தேவையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தயவுசெய்து, நீங்கள் உங்களது கணக்கை சரிபார்த்துள்ளீர்கள்என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன:

 1. செல்லுப்படியாகின்ற போட்டோ அடையாளச்சான்று (பாஸ்போர்ட் நகல் அல்லது ஓட்டுனர் உரிம நகல் போன்றவை)
 2. முகவரிச் சான்று (சமீபத்திய மின்சார அல்லது தொலைபேசி பில்லின் நகல் போன்றவை. இது கடந்த 3 மாதங்களுக்குள்ளானதாக இருக்கவேண்டும்)
 3. டெபாசிட் செய்ய நீங்கள் உபயோகிக்கின்ற கார்டின் நகல். வாடிக்கையாளர்கள், கார்டின் முழு நகல்களையும் எங்களுக்கு அனுப்புவேண்டுமாய் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, ஏனெனில் அது அபாயகரமானது. கார்டின் முதல் 12 எண்களை மறைத்திருக்கும் நிலையில் உங்களது கார்டுகளின் நகல்களை அனுப்புவது 100% பாதுகாப்பாய் இருக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம் (ஏனெனில் கடைசி 4 எண்களை மட்டுமே நாங்கள் காண வேண்டியுள்ளது). அதேபோல பின்பக்கத்திலுள்ள CVC எண்ணையும் மறைத்துவிடவும் (ஏனெனில் கையொப்பப் பகுதியை மட்டுமே நாங்கள் காணவேண்டியுள்ளது).

நாங்கள் உங்களது ஆவணங்களைப் பெற்று அவற்றை அங்கீகரித்த பின்னர், நீங்கள் வேறொரு வங்கி அட்டையை உபயோகிக்கும்பட்சத்தில், அத்தகைய புதிய கார்டின் நகலும் எங்களுக்கு உடனடியாக தேவைப்படும் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.

உச்சிக்குச் செல்க