ஸ்டாப் லாஸ் பாலிசி

டேக் பிராஃபிட்

கரன்சி விகிதமானது விரும்பத்தகு நிலையில் நகரும்போது வெளியேறலை ஏற்படுத்துவதற்காக டேக் பிராஃபிட் உபயோகிக்கப்படுகிறது. கரன்சி இணையின் விலையானது குறிப்பிட்ட நிலைக்கு உயரும் அல்லது வீழும் என நீங்கள் நம்புகின்ற ஆனால் அது அதற்குப் பிறகு என்ன செய்யும் என தெரியாத பட்சத்தில், டேக் பிராஃபிட் ஆர்டரை எடுப்பதானது, அந்த பொசிஷனை கரன்சி அடையும்போது உங்களது வர்த்தகத்தை மூடிவிடும்.

உதாரணம்:

நீங்கள் 1.3300’வில் EUR வாங்கி, அந்த விலை உயரும் என எதிர்பார்க்கும் பட்சத்தில், அதை 1.3350’விற்கு விற்பதற்கான டேக் பிராஃபிட் ஆர்டரை நீங்கள் நிறுவலாம். மார்க்கெட்டானது, 1.3350’வை அடையும்போது, உங்களது டேக் பிராஃப்ட் ஆர்டர் செயல்பட்டு, பொசிஷன் மூடப்படுகிறது.

ஸ்டாப் லாஸ் ஆர்டர்

டிரேடர்கள் தங்களது இடர்நிலையை வரையறுத்து, அதற்கேற்ப தங்களது வர்த்தகத்தை அமைத்துக்கொள்ளும்போது, லூசிங் டிரேடிற்கான வெளியேறும் புள்ளியை அமைத்துக்கொள்ள அவர்களுக்கு ஸ்டாப் லாஸ் ஆர்டர் உதவுகிறது. இது, மார்க்கெட் பொசிஷன் வீழ்ச்சியடையும்போது அதை கையாள இயலும் வகையில் மேற்கொண்டு இழப்பு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியவாறு, டிரேடர்களுக்கு பாதுகாப்பு நிலையைக் கூட்டுகிறது. *

உதாரணம்:

நீங்கள் 1.3300’வில் EUR வாங்கி, அவ்விலை வீழ்ச்சியடையும் என எதிர்ப்பார்க்கும் பட்சத்தில், அதை 1.3250’வில் விற்பதற்கான ஸ்டாப் லாஸ் ஆர்டரை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். மார்க்கெட்டானது 1.3250’வை அடையும்போது, உங்களது ஸ்டாப் லாஸ் ஆர்டர் செயல்பட்டு, பொசிஷன் மூடப்படுகிறது.

லிமிட் ஆர்டர்கள்

லிமிட் ஆர்டர் என்பது, முன்நிர்ணயித்த விலையில் குறியீடு ஒன்றை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கான ஆர்டருடன் பொசிஷனை (அல்லது எக்ஸ்போஷரை) திறப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது. டைப்பிற்கான லிமிட் ஆர்டர் என்பது, மார்க்கெட் விலையை விட நல்ல விலைக்கு வாங்க அல்லது விற்க டிரேடர் விரும்புகிறார் என்பதாகும்.

உதாரணம்:

EUR/USD விலை 1.33. விலையானது வாங்குவதற்கு மிகவும் சாதகமாக இருக்கும்போது டிரேடர், EUR/USD -ஐ வாங்க விரும்பினால், 1.32’ல் EUR/USD-ஐ வாங்குவதற்கான லிமிட்டை அவர்களை அமைத்துக்கொள்ளலாம்.

ஸ்டாப் லிமிட் ஆர்டர் என்பது, முன்நிர்ணயித்த விலையில் குறியீடு ஒன்றை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கான ஆர்டருடன் பொசிஷனை (அல்லது எக்ஸ்போஷரை) திறப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது. டைப்பிற்கான ஸ்டாப் லிமிட் ஆர்டர் என்பது, மார்க்கெட் விலையை விட மோசமான விலைக்கு வாங்க அல்லது விற்க டிரேடர் விரும்புகிறார் என்பதாகும்.

உதாரணம்:

EUR/USD விலை 1.33. விலையானது வாங்குவதற்கு குறைந்தளவு சாதகமாக இருக்கும்போது டிரேடர், EUR/USD -ஐ வாங்க விரும்பினால், 1.34’ல் EUR/USD-ஐ வாங்குவதற்கான லிமிட்டை அவர்களை அமைத்துக்கொள்ளலாம்.

ஈஃப் டன் ஆர்டர்

ஈஃப் டன் ஆர்டர் என்பது, மார்க்கெட்டானது குறிப்பிட்ட பொசிஷனை அடைந்து, குறிப்பிட்ட வாங்கல் அல்லது விற்றல் செய்யப்படும்பட்சத்தில், லிமிட் ஆர்டரை அல்லது ஸ்டாப் ஆர்டரை திறப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது. அது நிகழும்பட்சத்தில், ஈஃப் டன் ஆர்டரானது, உங்களது விருப்பத்தின்படியான கரன்சி விலைக்கான எதிர்கால வரம்புகளை குறிப்பிடுகிறது.

உதாரணம்:

மார்க்கெட் விலை 1.3300. மார்க்கெட் 1.3200’வை அடைந்தால் வாங்கும் வகையில் லிமிட் ஆர்டர் செய்யப்படுகிறது. யூரோக்களை 1.3200 விலையில் வாங்கும்பட்சத்தில், ஸ்டாப் லாஸ் ஆர்டரை 1.3100’விலும், டேக் பிராஃபிட் ஆர்டரை 1.3300’விலும் ஈஃப் டன் ஆர்டரால் அமைத்துக்கொள்ள முடியும்.

*உச்ச அளவு விலை எளிதில் மாறுமியல்பு கொண்டிருக்கும் நிகழ்வில், ஸ்டாப் லாஸ் லிமிட்டைக் கடக்கின்ற வகையில் டிரேடருக்கான மிகவும் சாத்தியமான விலையில் ஸ்டாப் லாஸ் ஆர்டர் செயல்படுத்தப்படும். இது, மார்க்கெட் நேரங்களில் அல்லது கமாடிட்டிக்காகவோ கரன்சிக்காகவோ மார்க்கெட் மூடப்படும் நேரங்களில் நிகழக்கூடும். இத்தகைய நிலைமைகளில், செயல்படுத்தலின்போது, மிகவும் நெருக்கமாயுள்ள சாத்தியமான மார்க்கெட் விலையில் ஆர்டர் செயல்படுத்தப்படும். அவ்விலையில் ஆர்டர் செயல்படுத்தப்படும் என்பதற்கு ஆர்டர்/லிமிட் உறுதி எதையும் வழங்குவதில்லை.