வித்ட்ராயல் செயல்முறை

பணம் திரும்ப எடுப்பதற்கு, புகுபதிகையை அடுத்து பக்கத்தின் உச்சியில் உள்ள ‘வித்டிராயல்’ தட்டியை கிளிக் செய்து, பிறகு ‘வித்டிராயல் வேண்டுகோள்’ஐ கிளிக் செய்யவும். கேட்கப்படுகின்ற தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள் அனைத்தையும் வழங்கி, விவரங்களை முழுமையாக பூர்த்திசெய்யவும். உறுதிசெய் என்பதை கிளிக் செய்து, பிறகு படிவத்தை பிரிண்ட் எடுக்கவும். அதில் பேனாவால் கையொப்பமிட்டு,withdrawals@xforex.comக்கு அனுப்பிவைக்கவும், அதன்மூலம் உங்களது வேண்டுகோளை எங்களால் செயல்படுத்த இயலும்.

தயவுசெய்து, எண்களையும் எழுத்துகளையும் மட்டுமே உபயோகித்து முழு படிவத்தையும் பூர்த்திசெய்யவும். குறியீடுகளையோ கரன்சி அடையாளங்களையோ உபயோகிக்கவேண்டாம். குறியீடுகள் ஏதுமில்லாமல், ‘முழு எண்களின்’ எண்களை மட்டுமே உபயோகியுங்கள்.

ஸ்விஃப்ட்/IBAN குறியீட்டு முறையை உங்களது வங்கி உபயோப்பதில்லை எனும் பட்சத்தில், இப்பகுதியை கிளையின் எண்ணை மீண்டும் நிரப்பி பூர்த்திசெய்யலாம் (உங்களது வங்கி ஸ்விஃப்ட் குறியீடு எதையும் கொண்டிருக்காதபட்சத்தில் மட்டுமே, ஆனால் பெரும்பாலான வங்கிகள் கொண்டிருக்கின்றன). இவ்விவரங்களுக்காக உங்களது வங்கியுடன் பேசுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

உங்களது ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே வித்டிராயல்கள் வழங்கப்பட இயலும் என்பதை தயவுசெய்து கவனிக்கவும். நீங்கள் முன்பாக எங்களுக்கு அனுப்பிவைக்கவில்லை எனும் நிலையில் இன்னமும் ஆவணங்கள் ஏதும் நிலுவையில் இருந்தால், விதிடிராயல்களை வழங்க இயலாது.

டெபாசிட் செய்யப்பட்ட அதே வழிமுறையிலேயே உங்களது வித்டிராயலும் செயல்படுத்தப்படுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் டெபாசிட் செய்தால், துவக்கத்தில் நீங்கள் டெபாசிட் செய்த தொகையானது கிரெடிட் கார்டிற்கு திருப்பிக் கொடுக்கப்படும். மற்ற அனைத்து ஈட்டல்களும், வங்கி டிரான்ஸ்ஃபர் வாயிலாக திருப்பிக்கொடுக்கப்படும். டெபாசிட் ஏதும் வங்கி டிரான்ஸ்ஃபர் வாயிலாக செய்யப்படும்பட்சத்தில், அனைத்து ஈட்டிய வித்டிராயல்களும் வங்கி டிரான்ஸ்ஃபர் வாயிலாக திருப்பிக்கொடுக்கப்படும்.

கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் முயற்சிக்கு எதிரான சட்டங்களின்படி, வித்டிராயல்கள் அனைத்தும், உங்களது டிரேடிங் கணக்கிலுள்ள சட்டப்பெயருடைய கணக்குகளைக் கொண்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகள் வாயிலாகவே செயல்படுத்தப்படவேண்டும்.

கிரெடிட் கார்டை உபயோகித்து நான் எவ்வாறு பணம் திரும்ப எடுப்பது?
கிரெடிக் கார்டு வாயிலாக பணம் திரும்ப எடுக்கும்போது, பின்வருவதை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டியுள்ளது:

  • பணம் திரும்ப எடுப்பதற்காக நீங்கள் உபயோகிக்கின்ற கிரெடிட் கார்டானது, நீங்கள் டெபாசிட் செய்ய உபயோகித்த அதே கிரெடிட் கார்டு தான்.
  • நீங்கள் திரும்ப எடுக்கின்ற தொகையானது, நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு துல்லியமாய் சமமானதாக அல்லது குறைவானதாக இருக்கிறது. இலாபங்கள் எனும் கூடுதல் தொகை எதுவும், வங்கி டிரான்ஸ்ஃபர் வாயிலாகத் தான் திரும்ப எடுக்கப்படுகிறது.
  • கேட்டுக்கொள்ளப்பட்ட கூடுதல் ஆவணங்கள் உட்பட, தேவையான ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் சமர்ப்பித்திருக்கிறீர்கள், அத்துடன், அவை யாவும் அங்கீகரிக்கப்பட்டு விட்டன.

வங்கி டிரான்ஸ்ஃபர் வாயிலாக நான் எப்படி பணம் திரும்ப எடுப்பது?
வங்கி டிரான்ஸ்ஃபர் வாயிலாக பணம் திரும்ப எடுப்பதற்கு, உங்களது டிரேடிங் கணக்கில் புகுபதிகை செய்து, உங்களது தளத்தின் உச்சியிலுள்ள டூல்பாரில் அமைந்துள்ள வித்ட்ராயல் வேண்டுகோள் பகுதியை கிளிக் செய்து, அதன் அறிவுறுத்தல்களை தொடரவும். தேவையான விவரங்களை நீங்கள் பூர்த்திசெய்த பிறகு, அதில் நீங்கள் கையொப்பமிட்டு, தனியொரு திரையில் தெரிவிக்கப்படுகின்ற அறிவுறுத்தல்களின்படி எங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். உங்களது வித்டிராயலின் நிலையை தெரிந்துகொள்வதற்கு, பக்கத்தின் உச்சியிலுள்ள ‘வித்ட்ராயல்’ தட்டியை கிளிக் செய்து, பிறகு ‘வித்ட்ராயல் நிலை’ என்பதை கிளிக் செய்யவும்.

உங்களது வித்டிராயல் நிலை தொடர்பாக உங்களுக்கு பிரச்சனைகள் ஏதுமிருந்தால், டிரேடிங் அமர்வுகளின் போது தினமும் 24 மணிநேரமும் ஆபரேட்டர்கள் கிடைக்கப்பெறுகின்றனர்.

எனது நிலுவை வித்டிராயல் ஏன் நிராகரிக்கப்பட்டது?
உங்களது வித்டிராயல் படிவம் நிராகரிப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்:

  • உங்களது ஆவணங்கள் இதுவரை அங்கீகரிக்கப்படாததும், நாங்கள் இன்னமும் நிலுவை ஆவணங்களுக்காக காத்திருப்பதும் அதற்கான காரணமாக இருக்கக்கூடும். எனவே, எங்களுக்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் அனுப்பிவிட்டீர்கள் என்பதை தயவுசெய்து உறுதிசெய்துகொள்ளவும். இந்த ஆவணங்களின் பட்டியலை சரிபார்ப்புப் பக்கத்தில் காணலாம்.
  • நீங்கள் எங்களுக்கு அனுப்பிய படிவம் கையொப்பமிடப்படாதது அதற்கான காரணமாக இருக்கலாம். மெய்நிகர் கையொப்பங்களை ஒப்புக்கொள்ளமுடியாது என்பதால் தயவுசெய்து படிவத்தில் பேனாவைக் கொண்டு கையொப்பமிடவும்.
  • நீங்கள் எங்களுக்கு முழுப் படிவத்தை அல்லது அசல் படிவத்தை அனுப்பியிருக்கவில்லை என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். எங்களுக்கு முழுப் படிவத்தையும் நீங்கள் அனுப்புவதையும் அரைகுறையாய் அல்ல என்பதையும் தயவுசெய்து உறுதிசெய்துகொள்ளுங்கள். எங்களது நிறுவன சின்னத்தை காட்டுகின்ற அசல் படிவத்தில் முழுமையாக பூர்த்திசெய்யப்படுவது எங்களுக்குத் தேவைப்படுகிறது.
  • பழைய படிவத்தை அதில் பழைய தேதியுடன் நீங்கள் எங்களுக்கு அனுப்பியுள்ளீர்கள் என்பது காரணமாக இருக்கலாம். உங்களது விதிடிராயல் படிவத்தில் உள்ள தேதியானது, நீங்கள் வேண்டுகோள் விடுக்கின்ற அதே தேதியாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உங்களது பிழைகளுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்பதால், படிவத்தில் நீங்கள் பூர்த்தி செய்யும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை தயவுசெய்து உறுதிசெய்துகொள்ளுங்கள்.

உங்களது கணக்கு சரிபார்ப்பின் நிலையி சோதிப்பதற்கு, நீங்கள் எங்களது ஆபரேட்டர்களை வாரத்தின் 5.5 நாட்களில் 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம்.